Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில்
வைரலாகும் புகைப்படத்தில் உள்ள கோயில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”காந்தார தேசம்”* என்றழைக்கபடும் ஆப்கானிஸ்தானில் உள்ள “Asamai என்ற மலைத்தொடரில் உள்ள சிவன் கோயிலின் இன்றைய நிலை…இத் இன்றும் உள்ளது , ஆனால் இங்கே வழி பாடு இல்லை – கோவில் அருகே உள்ள குளம் இன்றும் உள்ளது முஸ்லீம் தேசம் ஆகி விட்டதால் அவர்கள் இதை கண்டு கொள்வதில்லை.” என்பதாக இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Secret temples என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ”Harishchandreshwar Temple By – @valmik_kolhe ” என்று இடம்பெற்றிருந்தது.

அதில், குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் பெயரும் valmik Kolhe என்று இடம்பெற்றிருந்தது. ட்ரெக்கிங் மற்றும் புகைப்படைக்கலைஞரான இவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த மார்ச் 14, 2021 அன்று மகாராஷ்டிராவின் சயாத்ரி மலைத்தொடரில் எடுக்கப்பட்டதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இப்புகைப்படம் குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2023ஆம் ஆண்டு Indian Temples என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் “Harishchandreshwar Temple, Harishchandragad. One of the lesser known ancient temple in Maharashtra is situated at the top of Harishchandragad fort. To reach the temple, one neess a lot of walking and climbing. But in the end, it all is worth” என்று இந்த கோயில் குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள காட்சியில் உள்ள கோயிலும், இப்புகைப்படத்தில் உள்ள கோயிலும் ஒன்றே என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த ஹரிசந்திரேஷ்வரர் கோயிலே ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள சிவன் கோயில், சகுனி வழிபட்ட தலம் என்று பரவி வருகிறது.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By, valmik_kolhe, Dated March 14, 2021
Instagram Post By, Indian Temples, Dated July 23, 2023
Vijayalakshmi Balasubramaniyan
May 23, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024