Fact Check
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று பரவும் போலி நியூஸ்கார்டு!
Claim: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று பரவும் நியூஸ்கார்டு!
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?
Fact Check/Verification
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்கார்டுகளில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களிலிருந்து வேறுபட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் அந்த கார்டில் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை இருப்பதையும் காண முடிந்தது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என உணர முடிந்தது. இருப்பினும் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பலர் பகிர்ந்து வருவதால் இதை உரிய ஆதாரத்துடன் உறுதி செய்ய முடிவெடுத்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 18 தமிழ்நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில்நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்றை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடின் ஆசிரியர் கார்த்திகை செல்வனை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: ராகுல் காந்தியை குனிந்து வணங்கினாரா உத்தவ் தாக்கரே?
Conclusion
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரஜினியால் நெல்சனுக்கு ஏற்பட்ட விபரீதம் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altere Photo
Our Sources
X post by News 18 Tamilnadu, Dated August 20, 2024
Phone Conversation with Karthigai Selvan, Editor, News 18 Tamilnadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)