Fact Check
RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்தனரா?
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தர்கா ஒன்றை RSS அமைப்பினர் சுத்தம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check/Verification
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி நிவர் எனும் மிகப்பெரிய புயல் தாக்கியது. இதனால் இவ்விரு மாநிலங்களும் பல சேதங்களைச் சந்தித்தது.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசைத் தாண்டி, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், இளைஞர் அமைப்புகள் என பலர் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுக்குறித்து பலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன், சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் வரிசையில், RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஒரு தர்காவை சுத்தம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சாரிபில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தர்காவை RSS அமைப்பினர் சுத்தம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படம் பழைய புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
நம் தேடலில், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகும் இப்புகைப்படத்தை, 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்தபோது, அப்போதே சமூக வலைத்தளங்களில் பலர் பயன்படுத்தி இருப்பதை நம்மால் காண முடிந்தது.
இதன்மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்ததாக கூறி பரப்பப்படும் புகைப்படம் தவறானதாகும். ஏனெனில் இதே புகைப்படத்தை 20118 ஆம் ஆண்டு கேரளா வெள்ளத்தின்போது பலர் பயன்படுத்தியுள்ளனர்.
Conclusion
நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, பலர் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். ஆயினும் சிலர் இந்நிகழ்வை பயன்படுத்தி பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அவற்றில் சில செய்திகளை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஏற்கனவே ஆராய்ந்து, அவற்றை பொய் என்று நிரூபித்துள்ளோம்.
அக்கட்டுரைகளைப் படிக்க:
- நிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?
- இஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?
- `நிவர்’ புயல் மழையால் மூழ்கியதா சென்னை காசி தியேட்டர் பாலம்?
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?
இதன் வரிசையில், RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படமும் பழைய புகைப்படம் என்பதையும், இப்புகைப்படம் ஏற்கனவே கேரள வெள்ளத்தின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளோம்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/KumarReddyCH/status/1032178580099354624
Twitter Profile: https://twitter.com/mvikrant_22/status/1034483651969474563
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

