Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் இருந்தபோது கர்நாடக பாஜகவினருடன் சேர்ந்து போஸ் தந்ததாக புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நடிகை விஜயலட்சுமி பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன் பின் சிலப்படங்களில் நாயகியாக நடித்தார்.
தமிழ் தவிர கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் இவர் நாயகியாக நடித்துள்ளார். நாயகியாக இவர் நடித்தப் படங்கள் பெரும்பாலும் சரியாகப் போகாததால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. இதன்பின் குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் விஜயலட்சுமி அவர்கள் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் மீது சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தானும் சீமானும் இரண்டு வருடங்கள் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் அதன்பின் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் அச்சமயம் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. பல ஊடகங்கள் இதுக்குறித்துச் செய்தி வெளியிட்டன.


இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஆன நிலையில் இந்நிகழ்வு மீண்டும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
விஜயலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீமானுடன் தான் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்பின் அடிக்கடி சீமானுக்கு எதிராகப் பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதன் உச்சமாக, கடந்த சிலத் தினங்களுக்கு முன்பு சீமானும் ஹரி நாடார் என்பவரும் தனக்கு மிகவும் மன உளைச்சலை உருவாக்கியதாகக் கூறி வீடியோ பதிவொன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். https://m.facebook.com/story.php?story_fbid=207989907325248&id=100043427213541
இதன்பின் சீமானின் ஆதரவாளர்கள் விஜயலட்சுமிக்கு எதிராகப் பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர் மருத்துவமனையில் பாஜகவினருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததாக பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
சம்மந்தப்பட்ட புகைப்படத்தை ஆராய்ந்தபோது நமக்கு அதன் உண்மைகள் தெரிய வந்தது.
உண்மையில் இப்புகைப்படமானது, கடந்த வருடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் விஜயலட்சுமி அவர்கள் உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் அவருக்கு உதவுமாறு கேட்டிருந்தார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறினர்.
அதேபோல் பெங்களூர் பாஜவினரும் அவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது என்று விசாரணையில் தெரிய வருகிறது.
இதுக்குறித்து சமயம் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

நியூஸ் செக்கர் சார்பில் இந்நிகழ்வுக் குறித்து விசாரிக்கையில், விஜயலட்சுமிக் குறித்துப் பரப்பப்படும் புகைப்படமானது, அவர் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுத்தப் படம் என்பதும், இது வேண்டுமென்றே திரித்துப் பரப்பப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.
Times Of India: https://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-actress-complains-about-director-Seeman-to-police/articleshow/8685502.cms
Vikatan.com: https://www.vikatan.com/news/crime/actress-vijayalakshmi-files-police-complaint-against-seeman
Twitter Profile: https://twitter.com/Tamizhan_memez/status/1287633473662926849
Facebook Profile: https://m.facebook.com/story.php?story_fbid=207989907325248&id=100043427213541
Facebook Profile: https://www.facebook.com/photo/?fbid=625576601725155&set=a.275747006708118
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல்முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
September 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
September 2, 2025
Ramkumar Kaliamurthy
August 26, 2025