Fact Check
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில்
Fact
வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
திமுக இளைஞர் அணி மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் இருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஒவ்வொரு Chair லயும் Old Monk Bottle” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக அரசு கோவிலை இடித்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check/Verification
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் இருந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ஆராய்ந்தபோது அதில் இடம்பெற்றிருந்த எழுத்துருக்கள் செயற்கை நுண்ணறிவால் மாற்றியமைக்கப்பட்டது போன்று சிதைந்திருந்தன.

எனவே, அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதன் உண்மையான புகைப்படம் Behindwoods ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

மேலும், புதியதலைமுறை ஊடகத்தில் வெளியாகியிருந்த செய்தியிலும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பின் புகைப்படம் காட்சியாக இடம்பெற்றிருந்தது. அதில் எங்கும் மது வகைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து, திமுக கரூர் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுணா செந்தில்குமார் என்பவர் வைரல் புகைப்படத்தின் உண்மையான படத்தை பகிர்ந்திருந்தார்.
அதில், திமுக இளைஞர் அணி என்கிற வாசகங்களும் தெளிவாக இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தில் வேர்க்கடலை பாக்கெட் இடம்பெற்றிருந்த இடத்திலேயே மது பாட்டில் போலியாக எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது. உண்மையான புகைப்படம் தொடர்பான வேறு சில பதிவுகளை இங்கே காணுங்கள்.
Also Read: சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் இருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Puthiyathalaimurai, Dated December 14, 2025
Facebook Post From, Behind woods, Dated December 14, 2025
X Post from, Suguna Senthikumar, Dated December 14, 2025