Fact Check
பத்திரிக்கையாளரை இரண்டு போலீசார் அடித்துக் கொன்றதாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Claim
பத்திரிக்கையாளரை இரண்டு போலீசார் அடித்துக் கொன்றனர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
Fact
பத்திரிக்கையாளரை இரண்டு போலீசார் அடித்துக் கொன்றதாக பரப்பப்படும் வீடியோவில், இச்சம்பவம் இந்தியாவில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தயொழிய எந்த மாநிலம், எந்த ஊர் என்கிற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இச்சம்பவம் குறித்த முழுத்தகவல் அறிய இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் இந்தியா டுடே ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடிபட்ட பத்திரிக்கையாளர் பெயர் பல்விந்தர் குமார் பல்லா என்றும், அவரை மந்தீப் சிங், சுர்ஜித் குமார் என்கிற இரண்டு உதவி ஆய்வாளர்கள் தாக்கினர் என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இறந்ததாக கூறப்பட்ட பத்திரிக்கையாளர் இந்தியா டுடே டிவிக்கு பேட்டியளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. “எனக்கு சில காரணங்களாள் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அவர்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் என்னை இரக்கமற்ற முறையில் அடித்து கீழே தள்ளினர். நான் மழைநீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து சுயநினைவை இழந்துவிட்டேன்” என்று பத்திரிக்கையாளர் பல்லா இந்தியா டுடே டிவியிடம் கூறியுள்ளார்.
பல்லா அந்த இரண்டு போலீசாருக்கு எதிராக படாலா காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட அந்த இரண்டு போலீசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேடுகையில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் ஊடகத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியிலும் பத்திரிக்கையாளர் உயிருடன் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து படாலா நகர போலீஸ் டி.எஸ்.பி. சஞ்சீவ் குமாரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு பேசினோம். அவர் அடிப்பட்ட பத்திரிக்கையாளரின் உடல்நிலை தேறி வருவதாகவும், இக்குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Also Read: கவின் கொல்லப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ உண்மையானதா?
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது என்னவென்றால், இரண்டு போலீசார் பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியது உண்மையே. ஆனால் அவரை கொல்லவில்லை; அவர் உயிருடனே உள்ளார்.
Sources
News Report by Free Press Journal on August 7,2025
News Report by India Today on August 9,2025
Telephone conversation with DSP City Batala Sanjeev Kumar
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்.