Fact Check
முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!
Claim: முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோ!
Fact: பஞ்சாபி பாடகர் சிது மூஸ் வாலாவின் கடைசி பிரார்த்தனையின்போது இந்து, முஸ்லீம் உள்ளிட்ட மதத்தினர் டர்பன் அணிந்துக் கொண்டு இந்த பிரார்த்தனையில் கலந்துக்கொண்டனர். 2022 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்கிற பெயரில் ஏன் மூர்க்கத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.எல்லாம் மர்ம நபர்கள் செய்யும் வேலைதான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

