Fact Check
நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக பரவும் படம் அண்மையில் எடுக்கப்பட்டதா?
Claim
அண்மையில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வணங்கிய திருவள்ளுவர் சிலை விபூதி அணிந்திருந்ததா?
Fact
நேற்று ஹரித்வார் செல்வதாக கூறி கோவையிலிருந்த புறப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்த படம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
Also Read: CM’s Foreign Trip: ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
அதில் வைரலாகும் படத்துக்கும் நிர்மலா சீதாராமன் மற்றும் செங்கோட்டையனின் அண்மைய சந்திப்புக்கும் தொடர்பில்லை என உறுதியானது. அப்படமானது 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 31, 2017 அன்று வைரலாகும் இப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

Sources
X post by Office of Minister of Commerce and Industry, dated August 31, 2017