Fact Check
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டது.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இந்து குடும்பத்தை இஸ்லாமியர்கள் தாக்கினரா?
Fact
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவின் இடதுபுறத்தின் மேலே ஜிடிஏ 5 வீடியோகேமின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

தொடந்து இவ்வீடியோ குறித்து தேடுகையில் ‘TBG Plays’ எனும் கேமிங் வீடியோ கிரியேட்டர் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘fighter jets faces air-defense-system quickly attack blasttic missile gta 5’ என்று தலைப்பிட்டு வைர்லாகும் இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இப்பக்கத்தில் பல வீடியோ கேம் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ காட்சி ஒரு வீடியோ கேம் காட்சி என தெளிவாகின்றது.
Also Read: சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Sources
Facebook Post from TBG Plays, Dated May 01, 2025
Self Analysis