Fact Check
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் தவறி விழுந்த நோயாளி; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Claim
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் தவறி விழுந்த நோயாளி.
Fact
இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாகும்.
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் தமிழ்நாட்டின் அவிநாசி சாலையில் நடந்ததாக கூறி சில பதிவுகளும், உத்திரப்பிரதேசத்தின் யமுனா விரைவு சாலையில் நடந்ததாக கூறி சில பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றது.




சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக அரசு கோவிலை இடித்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check/Verification
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி விழுந்ததாக பரப்பப்படும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் சில விஷயங்கள் நடைமுறைக்கு மாறாக இருந்ததை உணர முடிந்தது.
பொதுவாக ஆம்புலன்ஸில் நோயாளி செல்லும்போது அவருக்கு துணையாக மருத்துவ உதவியாளர்கள் அல்லது நோயாளிக்கு வேண்டியவர்கள் கண்டிப்பாக உடனிருப்பார்கள். ஆனால் இவ்வீடியோவில் நோயாளி தவிர்த்து யாரும் காணப்படவில்லை.
அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ‘ஆம்புலன்ஸ்’ எனும் வாசகம் ஆடி பிம்பமாக (Mirror image) வாகனத்தின் முகப்பு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். மற்ற பக்கங்களில் சரியாகவே எழுதப்பட்டிருக்கும். ஆனால் வைரலாகும் வீடியோவில் ஆம்புலன்ஸின் பின்பக்கத்தில் ஆடி பிம்பமாக ஆம்புலன்ஸ் எனும் வாசகம் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
அதை தெளிவு செய்ய Hive Moderation, Sightengine, Truthscan, WasitAi உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணைய கருவிகளை பயன்படுத்தி வைரலாகும் வீடியோவை பரிசோதித்தோம்.
அச்சோதனையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என உறுதியானது.




இதேபோல் குன்னூரில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி இருந்த படுக்கை தவறி விழுந்ததாக மற்றொரு வீடியோ கடந்த மாதம் சமூக ஊடகங்களில் பரவியது. அவ்வீடியோவானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று உறுதி செய்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிட்டுள்ளோம். அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.
Also Read: சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி விழுந்ததாக பரவும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Self Analysis
Hive Moderation
Sightengine
Truthscan
WasitAi