Fact Check
சீமான் செய்வது RSS அரசியல் என்று சமுத்திரக்கனி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு உண்மையானதா?
Claim: சீமான் செய்வது RSS அரசியல் என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இதை உறுதி செய்துள்ளது.
“சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது. சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல்” என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
சீமான் செய்வது RSS அரசியல் என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் இத்தகவல் புதிய தலைமுறை நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை.
மாறாக “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை இணையத்தில் தெளிவு செய்திருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், அவரும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து சமுத்திரக்கனி மேற்கண்டவாறு பேசியுள்ளாரா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் அண்மையில் ஊடகத்திலோ, அல்லது அவரது சமூக ஊடகப் பக்கங்களிலிலோ பெரியார் குறித்த சீமானின் பேச்சு குறித்து எந்த ஒரு கருத்தையும் சமுத்திரக்கனி தெரிவித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்க முயன்றோம். ஆனால் அவரை நம்மால் தொடர்புக் கொள்ள இயலவில்லை. அவரது பதில் கிடைக்கும்பட்சத்தில் அவரின் கருத்தையும் இக்கட்டுரையில் வருங்காலத்தில் தெரிவிப்போம்.
Conclusion
சீமான் செய்வது RSS அரசியல் என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறையும் இதை உறுதி செய்துள்ளது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Website post by Puthiya Thlaimurai, Dated January 10, 2025
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்