Wednesday, December 17, 2025

Fact Check

தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

banner_image

Claim

image

தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள்

Fact

image

வைரலாகும் புகைப்படங்கள் குஜராத ஹன்சல்பூரில் நிறுத்தப்பட்டுள்ள மாருதி சுசுகி நிறுவன வாகனங்களாகும்.

தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தளபதி விஜய்யோட மதுரை மாநாடு Car Parking. தளபதி எப்போவுமே மாஸ் தான்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

Screenshot from X @TVK_HeadOffice

X Link/Archived Link

Screenshot from X @shantweet07

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சீமானை நாய் என்று குறிப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

Fact Check/Verification

தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்டு 26, 2025 அன்று ஊடகவியலாளரான ஆஷிஷ் வர்மா இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ”#MarutiSuzuki’s Gujarat Stockyard” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஆகஸ்டு 26, 2025 அன்று பதிவிட்டிருந்த வீடியோவில் இந்த புகைப்படத்தின் வேறு சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்த செய்தியுடன் இப்புகைப்படம் “Aerial video showing thousands of cars at Maruti Suzuki Dockyard in Gujarat goes viral” என்று garvitakat என்கிற குஜராத்தி மொழி ஊடகத்தில் இடம்பெற்றிருந்தது.

குஜராத்தின் ஹன்சல்பூரில் மாருதி சுசுகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த புகைப்படமே தவெக மதுரை மாநாட்டுடன் தொடர்பு படுத்தி பரப்பப்படுகிறது.

Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் குஜராத் ஹன்சல்பூரில் மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.  

Sources
YouTube Video From, Narendra Modi, Dated August 26, 2025
YouTube Video From, The Print, Dated August 26, 2025

RESULT
imageFalse
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,598

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage