Fact Check
TVK Karur stampede: விகடன் வெளியிட்டதாக பரவும் தவறான கருத்துப்படம்!
Claim
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விகடன் வெளியிட்ட கருத்துப்படம்.
Fact
வைரலாகும் கருத்துப்படத்தை விகடன் வெளியிடவில்லை. விகடன் தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
தவெக தலைவர் கரூரில் பரப்புரை செய்துக்கொண்டிருந்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக 41 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் “உண்மைலேயே விகடனை பாராட்டியாகணும்.. வாழ்த்துகள் விகடன் Cartoonist ஆசீப் கானுக்கு வாழ்த்துகள்…” என்று குறிப்பிட்டு கருத்துப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்த கருத்துப்படத்தில் கேள்விக்குறி வடிவில் மக்கள் இறந்துக்கிடக்க, விஜய் அவரது பிரச்சார வாகனத்தில் சிரித்தபடி உட்கார்ந்திருப்பதாக இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact Check/Verification
பொதுவாக விகடனில் ஹாசிப்கான் வரையும் கருத்துப்படங்களில் அவரின் கையெழுத்தும், ஆனந்த விகடனின் லோகோவும் இடம்பெற்றிருக்கும். ஆனால் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விகடன் வெளியிட்டதாக பரப்பப்படும் கருத்துப்படத்தில் இவ்விரண்டும் காணப்படவில்லை.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவை தொடர்புக்கொண்டு வைரலாகும் கருத்துப்படம் குறித்து விசாரித்தோம். அதற்கு அவர் “வைரலாகும் கருத்துப்படம் போலியானது; அப்படத்தை விகடன் வெளியிடவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து கரூர் துயர சம்பவம் குறித்து விகடன் தரப்பிலிருந்து கருத்துப்படம் ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம். அத்தேடலில் “ஜனநாயகன்..?” என்று குறிப்பிட்டு கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தை ஹாசிப்கானே வரைந்திருந்தார்.

ஆனால் அப்படம் வைரலாகும் படத்திலிருந்து வேறுபட்டிருந்ததை காண முடிந்தது.


Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடினரா?
Conclusion
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விகடன் வெளியிட்ட கருத்துப்படம் என்று பரவும் படம் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Ananda Vikatan, dated September 29, 2025
Phone conversation with Britto, Editor, Vikatan