Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விஜயை ‘நாய்’ என்று குறிப்பிட்டு பதாகை பிடித்த தவெக தொண்டர்.
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். தவெக தொண்டர் பிடித்திருந்த பதாகையிலிருந்த ‘நாளைய தீர்ப்பே வருக’ எனும் வார்த்தையை ‘நாயே வருக’ என எடிட் செய்து மாற்றி வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“நாகப்பட்டினத்துக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை ‘நாய்’ என்று குறிப்பிட்டு தவெக தொண்டர் ஒருவர் பதாகை பிடித்திருந்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அப்படத்தில் தவெக பெண் தொண்டர் ஒருவர் வைத்திருந்த பதாகையில் “நாகைக்கு வரும் எங்கள் நாயே வருக” என்று எழுதப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
தவெக தலைவர் விஜயை ‘நாய்’ என்று குறிப்பிட்டு தவெக தொண்டர் பதாகை பிடித்திருந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் தவெகவின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக ! நாகை மக்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்புகைப்படங்களில் ஒன்றாக வைரலாகும் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அப்படத்தில் பெண் தொண்டர் வைத்திருந்த பதாகையில் உண்மையில் “நாகைக்கு வரும் எங்கள் நாளைய தீர்ப்பே வருக” என்றே எழுதப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என அறிய முடிகின்றது. “நாளைய தீர்ப்பே வருக” எனும் வாசகம் “நாயே வருக” என்று மாற்றப்பட்டுள்ளது.


இதனையடுத்து தவெகவின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரை தொடர்புக்கொண்டு பேசினோம். அவரும் வைரலாகும் படம் போலியானது என்று உறுதி செய்தார்.
தவெக தலைவர் விஜயை ‘நாய்’ என்று குறிப்பிட்டு தவெக தொண்டர் பதாகை பிடித்திருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும்.
தவெக தொண்டர் பிடித்திருந்த பதாகையிலிருந்த ‘நாளைய தீர்ப்பே வருக’ எனும் வார்த்தையை ‘நாயே வருக’ என எடிட் செய்து மாற்றி வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Nellai TVK IT Wing, dated September 20, 2025
Phone Conversation with CTR.Nirmalkumar, Joint General Secretary, TVK
Vijayalakshmi Balasubramaniyan
December 12, 2025
Ramkumar Kaliamurthy
December 12, 2025
Ramkumar Kaliamurthy
October 23, 2025