Fact Check
திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
Claim
திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடிய விஜய்.
Fact
வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் விஜய் எந்த ஒரு பாடலையும் திருச்சி பரப்புரையில் பாடவில்லை.
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வது வார இறுதிகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்து, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் திருச்சியில் பரப்புரையின்போது பேச வந்த கருத்தை மறந்ததால் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என்ற பாடலை விஜய் பாடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெகவில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு.. ஜூனியர் விகடன் செய்தி படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை விஜய் பாடியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் திருச்சி மரக்கடையில் விஜய் பேசிய பேச்சின் முழு வீடியோ தினமலர் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் விஜய் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா பாடலை பாடி இருக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில் புதிய தலைமுறை, தந்தி டிவி உள்ளிட்ட யூடியூப் பக்கங்களிலும் விஜயின் திருச்சி பேச்சு வெளியிடப்பட்டிருந்தது. அவற்றிலும் அவர் பாடல் பாடி இருக்கவில்லை.
இதன்படி பார்க்கையில் திருச்சியில் விஜய் பேசிய பேச்சின் ஆடியோ பகுதியை மாற்றி அதற்கு பதிலாக தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா பாடலை பாடியதாக மாற்றி எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் நியூஸ் தமிழின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தில் இவ்வீடியோ குறித்து தேடினோம். அத்தேடலில் நியூஸ் தமிழ் வைரலாகும் வீடியோவை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனை தொடர்ந்து நியூஸ் தமிழை சார்ந்த ராஜேஷை தொடர்புக்கொண்டு அவ்வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் “இவ்வீடியோ போலியானது; நியூஸ் தமிழ் இவ்வீடியோவை வெளியிடவில்லை” என்று பதிலளித்தார்.
Also Read: பெரியாருடன் விஜய் நிற்கும் சிலை; வைரலாகும் படம் உண்மையானதா?
Conclusion
திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை விஜய் பாடியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Dinamalar, dated September 13, 2025
YouTube Video by Puthiya Thalaimurai, dated September 13, 2025
YouTube Video by Thanthi TV, dated September 13, 2025
Phone Conversation With Rajesh, News Tamil 24×7