Fact Check
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவு; வைரலாகும் அறிவுப்பு பலகை கர்நாடகாவில் வைக்கப்பட்டதா?
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது என்று கர்நாடகவின் பெட்ரோல் பங்கு ஒன்றில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது கர்நாடகா பெட்ரோல் பங்கில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவலின் பின்னணி குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கர்நாடகாவை விட முறையே ரூ. 8.24ம், ரூ.9.28 அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
இதற்காக கர்நாடகாவின் பெங்களூர், கர்நாடகா-தமிழ்நாடு எல்லை பகுதியான கிருஷ்ணகிரி, மற்றும் சென்னை விலைகளை ஒப்பீடு செய்தோம்.
பெட்ரோல் விலை ஒப்பீடு (தமிழகம் -கர்நாடகா)



மேற்கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் பெங்களூரில் ரூ.111.90க்கும், கிருஷ்ணகிரியில் ரூ.112.47க்கும், சென்னையில் ரூ.110.95க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் பெட்ரோலானது பெங்களூரை விட சென்னையில் ரூ.1 குறைவாகவும், கிருஷ்ணகிரியில் ரூ.1 அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
டீசல் விலை ஒப்பீடு (தமிழகம் -கர்நாடகா)



மேற்கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் பெங்களூரில் ரூ.94.79க்கும், கிருஷ்ணகிரியில் ரூ.102.55க்கும், சென்னையில் ரூ.101.05க்கும் டீசல் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் டீசலானது பெங்களூரை விட சென்னையில் ஏறக்குறைய ரூ.6 அதிகமாகவும், கிருஷ்ணகிரியில் ஏறக்குறைய ரூ.8 அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
மேலே செய்யப்பட்ட ஒப்பீடின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகின்றது.
வைரலாகும் அறிவிப்பு பலகை குறித்து நாம் தேடுகையில், இதே படம் புதுச்சேரி பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலான பதிவுகளை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து வைரலாகும் அறிவிப்பு பலகை புதுச்சேரி பகுதியை சார்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதுத்தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இதற்காக புதுச்சேரி மற்றும் தமிழகம்-புதுச்சேரி எல்லைப் பகுதிகளான விழுப்புரம், மற்றும் கடலூர் பகுதிகளின் விலைகளை ஒப்பீடு செய்தோம்.
பெட்ரோல் விலை ஒப்பீடு (தமிழகம் -புதுச்சேரி)



மேற்கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் புதுச்சேரியில் ரூ.104.72க்கும், விழுப்புரத்தில் ரூ.113.11க்கும், கடலூரில் ரூ.112.13க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் பெட்ரோலானது புதுச்சேரியை விட விழுப்புரத்தில் ஏறக்குறைய ரூ.8 அதிகமாகவும், கடலூரில் ஏறக்குறைய ரூ.7 அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
டீசல் விலை ஒப்பீடு (தமிழகம் -புதுச்சேரி)



மேற்கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் புதுச்சேரியில் ரூ.93.08க்கும், விழுப்புரத்தில் ரூ.103.14க்கும், கடலூரில் ரூ.102.23க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் பெட்ரோலானது புதுச்சேரியை விட விழுப்புரத்தில் ஏறக்குறைய ரூ.10 அதிகமாகவும், கடலூரில் ஏறக்குறைய ரூ.9 அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஒப்பீடை அடிப்படையாக வைத்து பார்க்கையில் வைரலாகும் அறிவிப்பு பலகை புதுச்சேரியை சார்ந்ததாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதை உணர முடிந்தது.
வைரலாகும் பலகை தமிழில் எழுதப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அறிவிப்பு பலகை வைத்தால் அதில் எம்மொழி இருந்தாலும் , கூடவே கண்டிப்பாக கன்னடமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்பலகையில் கன்னடம் இல்லை. ஆனால் புதுச்சேரியை பொருத்தவரை தமிழகத்தை போலவே தமிழ் மொழியே அதிகம் பேசப்படும் மொழி, ஆகவே அறிவிப்பு பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அதிகம் இடம்பெற்றிருக்கும். இதை வைத்து பார்க்கையில் இப்பலகையானது புதுச்சேரியில் வைக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது என்பது தெளிவாகின்றது.
Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
Conclusion
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் உறுதியாகின்றது.
அதேபோல் வைரலாகும் படத்தில் காணப்படும் அறிவிப்பு பலகை கர்நாடகா இல்லாமல் புதுச்சேரியை சார்ந்ததாக இருக்கலாம் என்பதையும் விளக்கி உள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Missing Context/False Context
Source
Goodreturns.COm
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)