Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வரும் செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவிருப்பதாக சமூக வலைத் தளங்களில் செய்திப் பரவி வருகிறது.

சமீபத்தில் தமிழக அரசின் அரசாணை ஒன்று வாட்சப் மூலமாகவும் இதர சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் பரவி வருகிறது. அதில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய்ந்தோம்.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி 4-ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை என்று தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.
இதுக்குறித்து ஜெயா பிளஸிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 14 அன்று பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட வாய்ப்பே இல்லை.
சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வெளியிட்டச் சுற்றறிக்கை என்று பரப்பப்படும் சுற்றறிக்கையை காணும்போது, அதில் காணப்படும் எழுத்துப்பிழை, எழுத்துரு(Font), வரி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு அது பொய்யான அறிக்கை என்று தெளிவாக கணிக்க முடிகிறது.
மேலும் தமிழக அரசும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியை மறுத்துள்ளது.
இதுக்குறித்து கேப்டன் நியூஸில் வெளிவந்த வீடியோ:
நம் விரிவான ஆய்வுக்குப்பின் செப்டம்பர் 14 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் எந்த சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Twitter Profile: https://twitter.com/sulthanoffl/status/1302197997694906368
Jaya plus Twitter Profile: https://twitter.com/jayapluschannel/status/1299719803515535360
Captain News YouTube Channel: https://www.youtube.com/watch?v=SyLUaJPpsXs
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)