Fact Check
கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரவும் வீடியோ.
Fact
இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
“ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் உள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் கடலுக்கடியில் அழகிய நகரம் ஒன்று இருப்பதாய் இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சட்டமியற்றுவதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றாரா ஈபிஎஸ்?
Fact Check/Verification
கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரப்பப்படும் வீடியோவில் ‘mbaiarts’ என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ‘mbaiarts’ எனும் பயனர் ஐடியுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ ஏப்ரல் 9, 2025 அன்று பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் இவ்வீடியோ டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என தெளிவாகின்றது.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by the user, mbaiarts, dated April 9, 2025