Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Entertainment
நீச்சல் குளத்தில் நடிகர் பிரபுவுடன் நடிகர் சிவாஜி
வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
நீச்சல் குளத்தில் நடிகர் பிரபுவுடன் நடிகர் சிவாஜி என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
‘உங்கப்பம்மவனே நகருடா நான் டைவ் அடிக்கணும்
அபூர்வமான புகைப்படம்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதா?
நீச்சல் குளத்தில் நடிகர் பிரபுவுடன் நடிகர் சிவாஜி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ஆராய்ந்தபோது அதன் ஓரத்தில் Google Gemini AI குறியீடு இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.

மேலும், இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்த மனசாட்சி என்கிற ஃபேஸ்புக் பக்கத்திலும் AI குறியீட்டுடனே இப்புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை உண்மையான புகைப்படம் போலவே பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து, இப்புகைப்படத்தில் பின்னணியில் இடம்பெற்றுள்ள முகங்கள் செயற்கை நுண்ணறிவு காட்சிகளாக சிதைந்த நிலையில் காணப்படுவதையும் நாம் கண்டறிந்தோம்.

எனவே, AI உருவாக்கங்களைக் கண்டறியும் Wasitai மூலமாக இப்புகைப்படத்தை ஆராய்ந்தபோது இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.

அதுமட்டுமின்றி, இப்புகைப்படத்தை AI or Not இணையதளம் மூலமாக ஆராய்ந்தபோது, இதில் பல்வேறு பகுதிகள் Deepfake ஆக உருவாக்கப்பட்டிருப்பதையும், இது AI மற்றும் Deepfake புகைப்படம் என்பதையும் நம்மால் உறுதி செய்ய முடிந்தது.

எனவே, செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்ட இந்த புகைப்படத்தை உண்மையான அரிய புகைப்படம் என்பதாக பகிர்ந்து வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: அஇஅதிமுக 142 இடங்களை பிடிக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
நீச்சல் குளத்தில் நடிகர் பிரபுவுடன் நடிகர் சிவாஜி என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Ramkumar Kaliamurthy
December 15, 2025
Ramkumar Kaliamurthy
December 11, 2025
Ramkumar Kaliamurthy
December 8, 2025