Fact Check
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடி வாங்கிய திமுக பிரமுகர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடி வாங்கிய திமுக பிரமுகர்
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். பாஜக-காங்கிரஸ் கட்சியினர் இடையே நடைபெற்ற நிகழ்வே தவறாக பரப்பப்படுகிறது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் அடி வாங்கிய திமுக பிரமுகர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வெளி மாநில செய்தி சேனலில் அடிவாங்கிய திமுக நிர்வாகி” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடி வாங்கிய திமுக பிரமுகர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Loksatta என்கிற மராத்தி ஊடகத்தில் YOYO TV என்கிற தெலுங்கு செய்தி ஊடகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இடையே கைகலப்பு நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ABP நாடு ஊடகத்திலும் “டிவி விவாதத்தின்போது மோதல்’ காங்கிரஸ் – பாஜகவினர் பயங்கர அடிதடி” என்று இதுகுறித்த செய்தி வெளியாகியிருந்தது.

தெலுங்கு ஊடகவியலாளரான ரேவதி என்பவர் இந்த வீடியோவை தெளிவாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே அடிதடி என்று குறிப்பிட்டு பதிவிட்ட நிலையில் அதனை ஷேர் செய்து பாஜக விடம் அடிவாங்கிய திமுக பிரமுகர் என்று பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, YOYO TV பக்கத்தில் ஆராய்ந்தபோது கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் கொண்டதாக ”Congress Leader Vs BJP Leader Fight” என்று தெளிவாக குறிப்பிட்டே இந்த நிகழ்ச்சியின் முழுமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, தெலுங்கு ஊடக விவாத நிகழ்ச்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக்கொண்ட நிகழ்வே திமுக பிரமுகர் அடி வாங்கியதாக தவறாக பரவி வருகிறது என்பது உறுதியாகியது.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடி வாங்கிய திமுக பிரமுகர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video from, YOYO TV, Dated November 18, 2025
Report from, ABP Nadu, Dated November 21, 2025