Fact Check
இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளாரா அன்வர் ராஜா?
Claim
இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜா
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜா என்று நியூஸ்கார்ட் ஒன்று பரவுகிறது.
“அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்த முன்னாள் எம். அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜா என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதி படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த நியூஸ்கார்ட் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தரப்பில் அதன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் அனுவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
அதுமட்டுமின்றி, இதுகுறித்து திமுகவின் கான்ஸ்டைன் ரவீந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதுபோன்ற ஆதாரமற்ற போலியான செய்திகளை பரப்புகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
Conclusion
இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜா என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, News 18 Tamil Nadu, Dated July 21, 2025
Phone Conversation with Anu, News 18 Tamil Nadu and CONSTANDINE RAVINDRAN, DMK, Dated July 21, 2025