Fact Check
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Claim
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை
Fact
வைரலாகும் வீடியோ ஆந்திராவைச் சேர்ந்ததாகும்.
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தாச்சேப்பள்ளி அரசு இளநிலை கல்லூரியில் ராகிங் அலப்பறை
எஸ்பி காரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும். திமுக ஆட்சியில் மாணவர்கள் பாதுகாப்பு இல்லை” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
Fact Check/Verification
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ஆந்திர ஊடகமான TV5 News வெளியிட்டிருந்த செய்தி வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், கடந்த ஆகஸ்ட் 09, 2025 அன்று இந்த வீடியோ ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சம்பவம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், India Today கடந்த ஆகஸ்ட் 13, 2025 அன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஆந்திர மாநிலம்,தாச்சேப்பள்ளி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் குடிபோதையில் இருந்த சீனியர் மாணவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு, ஷாக் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாதிப்படைந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவே தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பதாக தவறாக பரப்பப்படுகிறது.
Conclusion
திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, TV5 News, Dated August 09, 2025
News Report From, India Today, Dated August 13, 2025